சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேறுகிறது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! ஆளுநருக்கு செக் வைக்கும் தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 8:11 AM IST
Highlights

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமான குடும்பங்கள் நடு ரோட்டிற்கு வரும் நிலை அன்றாடம் ஏற்படுகிறது. ஒரு சிலர் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்யவும் செய்கின்றனர். இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியில் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக திமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வது தொடர்பாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கை தயார் செய்யப்பட்டது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா  தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஆளுநர் தரப்பில் சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது, தமிழ்நாடு அரசும் மறுநாளே விளக்கம் அளித்திருந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்து சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.

மாநில அரசுக்கு அதிகாரம்

இந்தநிலையில் மத்திய தகவல் ஒளிபரப்பு தறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவை மாநில அதிகாரத்தின் கீழ் வருபவை, எனவே இதை தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. 

மீண்டும் நிறைவேறுகிறது ஆன்லைன் சூதாட்ட மசோதா

இந்த மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்கிறார். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்களை பேரவையில் விளக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பேரவையில் 2வது முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா அல்லது காத்திருக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

யாரு என்ன சொன்ன என்ன? அதிமுக - பாஜக கூட்டணி எந்த மாற்றமும் இல்லை.. நயினார் நாகேந்திரன் அதிரடி சரவெடி.!

click me!