முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !

Published : May 22, 2022, 01:35 PM IST
முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !

சுருக்கம்

MK Stalin Govt: கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.   

இந்த தேர்தலில் புதிய அரசுகள் அமைந்து ஓராண்டை கடந்த நிலையில், அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் ஆய்வு ஒன்றை நடத்தியது. தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமரின் செயல்பாடு ஆகியவை தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும், 44% பேர் திருப்தியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். 

மொத்தம் 85% பேர் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  மொத்தம் 17%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 30% பேரும் திருப்தி அளிப்பதாக 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதேநேரத்தில் 13%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேர் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக 10% பேர் மட்டுமே கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. 

தமிழகத்தில் 17% பேர்தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாகவும் கூறியுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் பிரதமராக மோடியே நீடிக்க 32% பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய அரசு செய்துவிட்டது.. இந்த திராவிட மாடல் செய்யுமா ? திமுகவை வம்புக்கு இழுக்கும் எச்.ராஜா

இதையும் படிங்க : +1 மாணவியை கர்ப்பமாக்கிய ‘திமுக’ பிரமுகர் மகன்.. போக்சோ சட்டத்தில் கைது! அதிர்ச்சி சம்பவம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!