இதையெல்லாம் ஒரு பொழப்பா.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்து விட்டு இப்ப நடைமுறை படுத்துறீங்க.. சீமான்.!

By vinoth kumarFirst Published Sep 14, 2022, 11:41 AM IST
Highlights

நாட்டை ஆளுகின்ற முதல்வரின் கருத்து தான் என்ன? அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். 

இந்துக்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சீமான் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாரதிராஜாவின் உடை குறித்து பேசிய எச்.ராஜா பிரதமர் மோடியின் உடையை குறித்து ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி தினமும் நடக்கின்றார். அதனால் என்ன நடந்து விடப்போகிறது? ஒன்றும் நடக்காது. அவர் தினமும் நடக்கிறார். காலையில் ஒன்றேகால் மணி நேரம், மாலையில் ஒன்றேகால் மணி நேரம். அவர் நடைபயிற்சி எடுக்கிறார். இதனால் எந்த மாற்றம் வந்துவிடப்போகிறது?  50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுகின்ற போது ஏற்படுத்தாத மாற்றத்தை இந்த நடைபயணம் என்ன செய்து விடப் போகிறார் என்று வினவினார். 

இதையும் படிங்க;- மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா.. அவரை கைது செய்யுங்க.. கூட்டணிக்கு குண்டு வைக்கும் காங்கிரஸ் நிர்வாகி..!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வை 99 சதவீத மக்கள் எதிர்த்து தான் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதல்வர், மக்கள் கருத்திற்கானவரா? நலனிற்கானவரா என்ற கேள்வி உள்ளது. நாட்டை ஆளுகின்ற முதல்வரின் கருத்து தான் என்ன? அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். 

எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு கருத்தை கூறுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொரு கருத்தை கூறுகிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றீர்கள். எதை எதிர்தீர்களோ அதை நடைமுறைப்படுத்துகிறீர்கள். கோவில்களில் தமிழிலும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு உள்ளது தான் நடைமுறை. வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். இந்துக்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சீமான் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  என் பொண்ணு கேஷுவலாக கேட்குறா! ரெய்டுக்கு அடுத்து எப்போ வர போறீங்கன்னு!அசராமல் அசால்டாக பதில் சொன்ன விஜயபாஸ்கர்

click me!