
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்து ஊருக்குள் என்னோட மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார் என பெருமையாக பீத்திக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது.
தங்கள் மகள் வெளிநாட்டில் வாழ்வது பலருக்கு கேத்தாகவும், கர்வமாகவும் இருக்கிறது. இப்படி கெத்து காட்டும் அல்ப்ப புத்தி உள்ளவர்களுக்ககவே தமிழ் சினிமா கூட வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஆண்களை காமெடியன்களாகவும் கடைசியில் இந்திய இளைஞர்களிடம் தோற்றுப் போவதைப்போல மட்டுமே காட்டி இருக்கிறது.
இந்நிலையில் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் ரகசிய கணக்கெடுப்பு மூலம் அப்பட்டமாக தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது. என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது போன்ற தகவல்கள் ரொம்பவே அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.
பணத்தாசையில், வெளிநாட்டு மாப்பிள்ளை போன்ற அல்பத்தனத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கொண்ட பெண்கள் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் கல்யாணம் செய்துகொண்ட பெண்கள் கொடுத்து புகார் அளித்துள்ளார்கள். அடுத்த இடத்தில் ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் அளித்துள்ளார்கள்.
புகார்களில் பெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திரா பெண்களிடமிருந்து வரும் போன் அதிகமாக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.
இதில் சில வெளிநாட்டு மாப்பிள்ளைகள் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, சிகரெட்டால் சூடு வைப்பது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாகவும் விபசாரத்தில் தள்ளும் அளவிற்கு அலைய விட்டும் இருக்கிறார்கள்.
இந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. அதுமட்டுமல்ல சர்வேயில் சிக்காமல் இன்னும் ஆயிரக்கணக்கான புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.