ஓ மை காட்! சின்னம்மா அல்ல சீக்கம்மா.. சசிகலாவிற்கு இவ்வளவு பிரச்னைகளா..?’ கிண்டலாய் சீண்டும் அ.தி.மு.க. ஐ.டி விங்..!

By Vishnu PriyaFirst Published Oct 17, 2019, 5:57 PM IST
Highlights

ஆயிரம்தான் ஜெயலலிதாவை ‘இரும்புப் பெண்மணி! ஆணாதிக்க அரசியல் நெருப்பாற்றில் எதிர்நீச்சலடித்து வென்றவர்! மலைமுழுங்கி அரசியல் அனுபவசாலிகளை தன் காலில் விழ வைத்தவர்!’ என்றெல்லாம் இந்த தேசம் அவரை கொண்டாடினாலும் கூட, அரசியல் ஜெயலலிதாவின்  தைரியத்தின் முதுகெலும்பாய் நின்றவர் சசிகலா என்பதில் சந்தேகமே இல்லை. 

ஆயிரம்தான் ஜெயலலிதாவை ‘இரும்புப் பெண்மணி! ஆணாதிக்க அரசியல் நெருப்பாற்றில் எதிர்நீச்சலடித்து வென்றவர்! மலைமுழுங்கி அரசியல் அனுபவசாலிகளை தன் காலில் விழ வைத்தவர்!’ என்றெல்லாம் இந்த தேசம் அவரை கொண்டாடினாலும் கூட, அரசியல் ஜெயலலிதாவின்  தைரியத்தின் முதுகெலும்பாய் நின்றவர் சசிகலா என்பதில் சந்தேகமே இல்லை. குடும்பம் ஏதுமில்லாமல், ‘சிங்கிள் சிங்கமாய்’ நின்ற ஜெயலலிதாவுக்கு Moral support! மற்றும் அன்பும், ஆதரவும் வழங்கி துணையாயிருந்தவர் சசிகலாவும் அவரது குடும்பமும் தான்.  மிக கடுமையான ‘சர்க்கரை’ நோயினாலும், அதீத எடையினால் சீராக நடக்க முடியாமலும் ஜெயலலிதா அவதிப்பட்டபோது நடமாடும் மருத்துவமனையாகவே சசி இருந்தார்! என்பார்கள்.

ஜெயலலிதாவுக்கு ‘வலி நிவாரணி’ மாத்திரைகளை அதிகம் வழங்கினார்! என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் மருத்துவ ரீதியில் சசி மீது இருந்தாலும் கூட ‘அதன் மூலம் சசி பெற்றது என்ன?’ என்கிற கேள்வியும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. இந்நிலையில், ஜெயலலிதா முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ‘சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு’ தீர்ப்பின் படி நான்காண்டு சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் சசி. தமிழக எல்லை தாண்டி, கர்நாடகமாநிலம் பரப்பன அக்ரஹாராவில் சிறைப்பட்டு கிடக்கும் சசியை சுற்றிலும் தொடர்ந்து சர்ச்சைகளும், செய்திகளும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் கடந்த சில நாட்களாக....’நன்னடத்தையின் அடிப்படையில், சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பகாவே விடுதலை செய்து, அவரை அ.தி.மு.க.வின் தலைமையை ஏற்க வைத்து, தேர்தலில் நிறுத்திட திட்டமிடுகிறது பா.ஜ.க.’என்றொரு தகவல் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. 


இது உண்மையோ அல்லது பொய்யோ! ஆனால் இந்த தகவலை அடியோடு மறுக்கிறது அ.தி.மு.க. ’அப்படியொன்று நிகழ வாய்ப்பே இல்லை.’ என்று அடித்துச் சொல்கிறார்கள். தினகரனும் ‘துரோகிகளோடு எப்படி சின்னம்மா இணைவார்?’ என்று இதற்கு மறுப்பு சொல்கிறார். ஆனாலும் அதையெல்லாம் கடந்தும் இந்த தகவல், வலுவாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கினை சேர்ந்த சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சோஷியல் மீடியாவில் சில கருத்துக்களை பரப்பி வருகின்றனர். முழுக்க முழுக்க சசிகலாவை சீண்டும் அந்த பதிவில்....

“சின்னம்மா!ன்னு சொல்லிட்டு திரியுறாங்க, ஆனா பெரிய ‘சீக்கம்மா’வாஇருக்கிறாங்க அந்த வயசானம்மா. அதாவது நாலு வருஷத்துக்கு முன்னாடி கண்ணுல புரை நோய்க்கு ட்ரீட்மெண்ட் எடுத்ததுல இருந்தே அந்தம்மாவுக்கு கண்ணுல நீர் வடியுற பிரச்னை இருந்துட்டே இருக்குது (அப்போ அம்மா இறந்தப்ப அழலையா!?) . ஜெயிலுக்குள்ளே போனதும் இந்த பிரச்னை அதிகமாயிடுச்சாம். தூக்கமின்மை தொந்தரவு ரொம்பவே இருக்குதாம். (பண்ணுன பாவத்துக்கு எப்படி தூக்கம் வரும்?), நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், ஹை பிரஷர் ரெண்டும் இருக்குதாம். இதெல்லாம் போக சுகர் போட்டுப் பாடாய் படுத்துது. பல்வலியும் வந்து சேர்ந்துடுச்சு (கழக நிர்வாகிகளை திட்டித் தீர்த்த வாய்க்கு இப்படித்தான் வலிக்கும்.), சிறுநீரக தொற்று கோளாறு, தலைசுற்றல் உள்ளிட்ட வழக்கமான வயோதிக பிரச்னைகளும் நிறையவே இருக்குதாம். இம்புட்டு பஞ்சாயத்துகளை வெச்சுக்கிட்டு இந்த அம்மா வெளியில வந்து, நம்ம கழகத்துக்கு தலைமை ஏற்க முடியாது. ஹாஸ்பிடலே கதின்னு கிடக்க வேண்டிதான்.” என்று நக்கலும், நய்யாண்டியுமாக பதிந்து சீண்டித் தள்ளியுள்ளனர். 

இதற்கு அ.ம.மு.க.வினர் ரியாக்ட் பண்ணாமல் இருப்பதுதான் அதிர்ச்சியே!

click me!