யோக்கியனா சீமான்..? அவன்- இவன் எனப்பேசி பட்டையை கிளப்பும் அமைச்சர் கே.டி.ஆர்..!

Published : Oct 17, 2019, 05:43 PM IST
யோக்கியனா சீமான்..? அவன்- இவன் எனப்பேசி பட்டையை கிளப்பும் அமைச்சர் கே.டி.ஆர்..!

சுருக்கம்

10 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்யாத சீமான் ஒன்றும் யோக்கியன் கிடையாது. 

சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்குத் தெரியாது என நினைக்கிறாரா?  என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’’முன்னாள் பிரதமரை நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்வது தமிழர்களின் மானம், மரியாதை மீது களங்கத்தை மீண்டும் சுமத்துவதற்கு விடுவிக்கப்பட்ட சவால். இதை துடைக்க வேண்டும் என்று சொன்னால் சீமான் போன்றவர்களை தண்டிக்க வேண்டும். சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களிடமும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு சீமான் அரசியல் நடத்தி வருகின்றனர்.

எந்த தமிழரும் ராஜீவ்காந்தி படுகொலையை ஆதரிக்கவில்லை. தமிழன் என்று சொல்லிக்கொள்ள சீமான் வெட்கப்பட வேண்டும். அவர் மீது தமிழக அரசும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்யாத சீமான் ஒன்றும் யோக்கியன் கிடையாது. வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று சீமான் நினைக்கிறாரா? என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்