அடக்கடவுளே.. எவ்வளவு சொல்லியும் அடங்காத சென்னைவாசிகள்.. மீண்டும் கோடம்பாக்கத்தில் கொடி கட்டிய கொரோனா..

Published : Mar 23, 2021, 12:34 PM IST
அடக்கடவுளே.. எவ்வளவு சொல்லியும் அடங்காத சென்னைவாசிகள்.. மீண்டும் கோடம்பாக்கத்தில் கொடி கட்டிய கொரோனா..

சுருக்கம்

முக கவசத்திற்காக  தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் 80 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது. நேற்று மட்டும் 1.5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.  

உலக காசநோய் தினத்தை ஒட்டி ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் காசநோயை 2025க்குள் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், கூட்டமான நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடும் போதும் இடைவெளி பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும்.சென்னை, கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் இன்னும் பரிசோதனைகளகளை அதிகரித்து மைக்ரோ கன்டெய்ன்மண்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க தேவை இருந்தால் அதிகரிக்க  மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அறிவுறித்தல் வழங்கி இருக்கிறோம். 

முக கவசத்திற்காக  தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் 80 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது. நேற்று மட்டும் 1.5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய 13 இடங்களில் cluster கண்டறியப்பபட்டுள்ளது என்றார்.கடந்தாண்டு சென்னையில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது கோடம்பாக்கத்தில் அதன் தாக்கம் தீவிரமாக இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கும் நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதே கோடம்பாக்கம் முன்னிலை வகிப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சயடைய வைத்துள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!