மீண்டும் லாக் டவுன்..?? மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 12:16 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் தமிழக தலைமை செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் தமிழக தலைமை செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  கடந்த 16,17 ஆகிய தேதிகளில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக தமிழக தலைமைச் செயலாளர்  ராஜீவ் ரஞ்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை,  திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம்,  திருப்பூர்,  சேலம், மதுரை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுவதாக கூறி இருந்தார். அதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலம் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன, தனியார் ஆய்வாளர்களிளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாதிரிகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

பொதுமக்கள் கொரோனா தடப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.  இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் அவர் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், RT PCR பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன்  மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் பலர் மத்தியில் இருந்து வரும் நிலையில், கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறுவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

click me!