கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்... கி.வீரலட்சுமி ஆவேசம்..!

Published : Mar 23, 2021, 11:42 AM IST
கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்... கி.வீரலட்சுமி ஆவேசம்..!

சுருக்கம்

தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் 

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் என கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர்.  தற்போது சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’சார்பில் போட்டியிடுகிறார்.https://www.facebook.com/permalink.php?story_fbid=16845827844689

இந்நிலையில், கி.வீரலட்சுமி பம்மலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது தெரியாத ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே “ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்” என வீடியோ பதிவு ஒன்றையும் வீரலட்சுமி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!