சசிகலாவின் நாற்காலியின் கீழ்தான் தமிழகம் வெற்றிநடை போடுகிறது.. உதயநிதி நக்கல் பேச்சு.

Published : Mar 23, 2021, 11:33 AM IST
சசிகலாவின் நாற்காலியின் கீழ்தான் தமிழகம் வெற்றிநடை போடுகிறது..  உதயநிதி நக்கல் பேச்சு.

சுருக்கம்

கல்வி உரிமை மாநிலத்திற்கு மிக மிக முக்கியமானது, அந்த உரிமையை விட்டு கொடுத்து விட்டார்கள்.ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். 

மத்திய அரசிடம் நிதி பற்றாக்குறை என்று மோடி கூறுகிறார், ஆனால் கொரோனா காலத்தில் தனியாக போய் வருவதற்கு 2 சொகுசு விமானம் வாங்கி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மதுரையில் நடைபெற்ற  பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விவரம்:  

கல்வி உரிமை மாநிலத்திற்கு மிக மிக முக்கியமானது, அந்த உரிமையை விட்டு கொடுத்து விட்டார்கள்.ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். நீட் தேர்வு வந்த 3 ஆண்டுகளில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.வெற்றி தமிழகமே என்று கூறுகிறார்கள் ஆனால் சசிகலாவின் நாற்காலியின் கீழ் தான் வெற்றி நடை பெடுகிறது,சசிகலா காலில் விழுந்து முதலமைச்சராகி விட்டு அவருக்கு அவரின் கால்களையே வாரி விட்டார், யாருக்கும் விசுவாசம் இல்லை. 

சசிகலா காலில் தான் விழுந்தாரா என்று சசிகலாவிடம் கேட்டால் தான் தெரியும்.முதன் முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று ஒ.பன்னீர் செல்வம் தான் கூறினார். ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்,  ஒவ்வொரு அமைச்சரும் தினமும் பேட்டி கொடுத்தார்கள், அவர் இட்லி சப்பிட்டார் என்று, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஒரு சிசிடிவி கேமரா கூட வேலை செய்யவில்லை என்று கூறினார்கள் இது போதும் அவரின் இறப்பில் மர்மம் இருக்கிறது என்பதை உணர்த்த. இப்போ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ஒரு நாள் கூட நான் பார்க்கவில்லை என்று கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.  

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!