அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி... 3 முக்கிய நிர்வாகிகள் நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 11:26 AM IST
Highlights

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த 3 அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த 3 அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத தற்பாதைய எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட மேலும் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டு அறிக்கையில்;- கட்சியின் கொள்கை-குறிக்காள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், சடட்ப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்ததாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ச.கிரம்மர் சுரேஷ், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி.அழகு சுப்பையா, விருதுநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலம் எம்.தங்கராஜ் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.

கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!