அட கடவுளே.. கொரோனாவால் தாய் தந்தை இருவரையும் இழந்து குழந்தைகள் எவ்வளவு பேர் தெரியுமா.? அமைச்சர் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2021, 4:50 PM IST
Highlights

தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை  செயலகத்தி்ல் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்,  சமூக நலத்துறையிடம் அனுமதி பெறாமல் செயல்பட்ட 3 காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், காப்பகங்களிம் செயல்பாடுகள் குறித்து சமூக நலத் துறையில் துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.


குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ஒரு சேவை மையம், தருமபுரி மற்றும் தூத்துக்குடியில் செயல்பட தொடங்கியுள்ளது என்றும், தமிழகம் முழுவதும்  மையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 126 என்றும், பெற்றோர்களில் ஒருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை  4056 என்றும் தெரிவித்தார்.

பெண் சிசுக்கொலை திமுக ஆட்சியில் இல்லை என்றும், இருந்தபோதும் அது குறித்தான விழிப்புணர்வு ஏற்கனவே நடைபெற்ற மாவட்டங்களில் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கம் வழங்க 2703 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் 3 லட்சம் நபர்கள் காத்திருப்பில் உள்ளதாகவும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்  என்றும் அவர் கூறினார். 
 

click me!