அட கடவுளே.. இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா. மீண்டும் ஊரடங்கு.? டெல்லி அரசு அதிரடி கட்டுப்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 11:23 AM IST
Highlights

இதனால் தற்போது டெல்லி அரசு தங்கள் மாநிலத்திற்குள் இந்த வைரஸ் பரவாமல்  தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏனெனில்  ஒட்டுமொத்த நாட்டின் சராசரியில் 86% கொரோனா தொற்று இந்த மாநிலங்களில் உள்ளது என்பதே அதற்கு காரணம். 

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் குறிப்பாக கொரோனா எண்ணிக்கை அதிகமாக உள்ள ஐந்து  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்  டெல்லிக்கு நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா ,சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை எடுத்து வருவது அவசியம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 26  நள்ளிரவு முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலகளவில் இந்த வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மெதுவாக கட்டுக்குள் வந்து உள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் மட்டும் அது மீண்டும்  பரவ தொடங்கியுள்ளது.  மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

இதனால் தற்போது டெல்லி அரசு தங்கள் மாநிலத்திற்குள் இந்த வைரஸ் பரவாமல்  தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏனெனில் ஒட்டுமொத்த நாட்டின் சராசரியில் 86% கொரோனா தொற்று இந்த மாநிலங்களில் உள்ளது என்பதே அதற்கு காரணம். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் டெல்லி அரசு மேற்கண்ட 5 மாநிலங்கள் இருந்து டெல்லி நோக்கி வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும், அவர்கள் பயணம் மேற்கொண்ட 72 மணி நேரத்திற்கு முன்பாக சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு விமானம் மற்றும் ரயில், பஸ் மூலம் வரும் பயணிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் டெல்லிக்கு கார் மூலம் வரும் பயணிகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கொரோனாவழக்குகள் மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அமராவதி  மற்றும் யவத் மாலிலும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வெவ்வேறு வகையான வைரஸ்கள் கண்டுபிடித்துள்ளதாக கடந்த வாரம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!