முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்..!

By vinoth kumarFirst Published Feb 24, 2021, 11:02 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மீண்டும் போட்டியிட உள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மீண்டும் போட்டியிட உள்ளனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக, தமிழகத்தில் போட்டியிட ரூ.15 ஆயிரம், புதுச்சேரி மாநிலத்தில் ரூ.5 ஆயிரம், கேரளாவில் ரூ.2 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்க வேண்டும் கூறப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு  விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

அதன்படி சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனும், திண்டுக்கல்  தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசனும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி ஆகியோர் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். 

click me!