ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இதை செய்வார்கள்... மனம் திறந்த சசிகலா..!

Published : Feb 24, 2021, 10:55 AM ISTUpdated : Feb 24, 2021, 11:23 AM IST
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இதை செய்வார்கள்... மனம் திறந்த சசிகலா..!

சுருக்கம்

நிச்சயமாக இதை செய்வீர்கள். நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி,நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘’நான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தேன்.  அப்போது தமிழக மக்கள் ஆசியுடன் நலம் பெற்று தமிழகம் வந்தேன். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். நம்முடைய இலக்கு புரட்சித்தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்ற மீண்டும் தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று கூறி சென்றுள்ளார். 

அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் புரட்சித்தலைவியின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் ஆகும். அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்கள். நிச்சயமாக இதை செய்வீர்கள். நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!