திமுக பிரமுகர் பொன்முடிக்கு திடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Feb 24, 2021, 10:31 AM IST
திமுக பிரமுகர் பொன்முடிக்கு திடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திமுக துணைப்பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி நேற்று இடைக்கால பட்ஜெட் தொடரில் பங்கேற்று வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. 

அதனால் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் உடல்நலம் தேரிவருவார். மற்றபடி அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவர் நலமுடன் உள்ளார் என்றார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!