மனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி புகழாரம்..!

Published : Feb 24, 2021, 10:27 AM ISTUpdated : Feb 24, 2021, 12:03 PM IST
மனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி புகழாரம்..!

சுருக்கம்

 வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் , அதிமுக கூட்டணி அமைத்து இத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார் மோடி. 

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி அவரின் பிறந்தநாள் மாநில அரசின் சார்பாக பெண்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிக்கும் அதிமுக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில், ’’ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன’’ எனப்பதிவிட்டுள்ளார்.  வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் , அதிமுக கூட்டணி அமைத்து இத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார் மோடி.

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!