அட கடவுளே.. மீண்டும் கொரோனா கொடூரம்.. கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 432 பேருக்கு வைரஸ் தொற்று.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2020, 12:11 PM IST
Highlights

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 14 ஆயிரத்து 432 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 81, 673, 280 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்து 81 ஆயிரத்து 544 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 57,799,595 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 22,092,141 தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 801 பேர்  ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். அமெரிக்கா இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. 

இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது  இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 10,224,797 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 48 ஆயிரத்து 190 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 9,807,569  பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந் துள்ளனர். 2 லட்சத்து 69 ஆயிரத்து 38 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 944 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 24 ஆயிரத்து 900 பேர் வைரஸ் தொட்டியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 98 லட்சத்து 7 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

ஆனாலும் வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 190 ஆக பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
 

click me!