அதிகாரிகள் ஸ்டாலினுடன் சந்திப்பு.. கொரோனா தடுப்பில் வேகம் எடுத்த தமிழக அரசு. 61 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை.

By Ezhilarasan BabuFirst Published May 3, 2021, 1:32 PM IST
Highlights

தமிழக முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், கொரனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
 

தமிழக முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், கொரனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

புதிய அரசு அமைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ 61 கோடி ஒதுக்கீடு 

செய்யப்பட்டுள்ளது. புதியதாக கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்குதல், கொரானா தொற்று ஏற்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. 

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களுக்கும் 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டால், அந்த மாவட்டத்துக்கு 3 கோடி ஒதுக்கப்படுகிறது. 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தால் அந்த மாவட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு1 கோடி ஒதுக்கப்பட்டுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதிய அரசு பதவி ஏற்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மு.க ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  

 

click me!