தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் விவரம்..!

By vinoth kumarFirst Published May 3, 2021, 1:31 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, பெருபான்மை பலத்துடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

வேட்பாளர் விவரம்;-

* திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ.பெரியசாமியும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமாவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர். இதில் ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமாவை 1,32,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் திலகபாமா உள்ளிட்ட, ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற அனைத்து கட்சியினரும் டெபாசிட் இழந்தனர். மேலும் ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

*  இவருக்கு அடுத்த படியாக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் எ.வ.வேலு 1,37,665 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தணிகைவேல் 43,399 வாக்குகள் பெற்றிருந்தார். 

*  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்தாலும் எடப்பாடி தொகுதியில்  93,802 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி 1,63,154 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69,362 வாக்குகள் பெற்றிருந்தார். 

*  திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கேன்.என்.நேரு 1,12,515 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபன் 31,588 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை சுமார்  81,283 வாக்குகள் வித்தியாசத்தில் கேன்.என்.நேரு தோற்கடித்தார். 

*  சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,580 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலின் 1,05,794 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆதிராஜராம் 35,214 வாக்குகள் வாங்கியுள்ளார்.

click me!