ஒடிசா முதலமைச்சரின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல்…. பாஜக அத்துமீறல்!!

First Published Feb 11, 2018, 9:49 AM IST
Highlights
Odissa CM secretary house attack by BJP


ஒடிசா மாநிலத்தின்  முதலமைச்சர்  நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். இவரிடம் செயலாளராக இருப்பவர் வி.கே.நாராயணன். இவர்  தலைமைச் செயலகம் அருகே உள்ள அலுவலக குடியிருப்பில் வசித்து வந்தார்.



இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் பா.ஜ.க. கொடிகளுடன் ஒரு கும்பல் இவரது வீட்டை நெருங்கியது. கதவின் அருகில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. மேலும் முதலமைச்சர் நசின் பட்நாக்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.
 
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதலமைச்சரின்  செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த  4 பேரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய  நவீன் பட்நாயக், இந்த சம்பவம்  உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

click me!