நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் பேச்சுவார்த்தை... மீண்டும்... மீண்டும்... முரண்டு பிடிக்கும் மாஃபா பாண்டியராஜன்

First Published May 11, 2017, 1:48 PM IST
Highlights
OBS team Mafoi Said we will be ready for talks accept out demands


நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை. நிபந்தனைகள் ஏற்கப்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தை விரைவு பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவின் ஓ.பிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என சிதறிக்கிடக்கிறது. ஓ.பிஎஸ்  ஈபிஎஸ் அணி ஒற்றுமைக்காக இணைவதாக அறிவித்தன. ஆனால் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்டட நிலையில் இரு அணியினரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் இன்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 17 முதல் 18 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கவேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். இந்த தண்ணீர் திறப்பு விழாவானது தற்போது ஒரு திருவிழாவைப்போல் நடைபெற்றுக் கொண்டிருகிறது.

அதேபோல், நாளை சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் மாலை 5 மணியளவில், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் மற்றும் பல்வேறு தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்குபெறுவார்கள். அதேபோல், மிகமுக்கியமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிகப்பட்ட 56 கட்சிகளையும் அழைத்திருக்கிறோம்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 8 முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிகப்படும். அதில் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் கட்சியினை தேர்தலில் இருந்து ரத்து செய்ய வேண்டும். மேலும், வாக்குபதிவின் போது ரசிது முறையை பின்பற்றலாமா அல்லது தற்போது நிலுவையில் இருக்கும் மின்னணு வாக்கு முறையையே பயன்படுத்தலாமா? என கலந்தாலோசிக்கப்படும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார். அதேபோல், அணிகள் இணைப்பு குறித்து நாங்கள் தெரிவித்த நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாக ஏற்கப்படவில்லை. அப்படி எங்களது நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் பட்சத்தில் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

click me!