
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வரும் மர்ம சாவுகளில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ், தற்போது காண்ட்ராக்டர் சுப்பிரமணி என அடுத்தடுத்து மர்மச்சாவுக்கு ஸ்டாலின் நீதி விசாரணை கேட்பது நியாயம் தானே என தினகரன் அணி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வரும் மர்ம சாவுகளில் தற்போதைய கனகராஜ் மற்றும் சுப்பிரமணி சாவுகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆட்சி ஓரு நிலையான ஆட்சி கிடையாது. இந்த ஆட்சியில் ஐந்து குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் காவல்துறையை நிர்வாகிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஒரே ஒரு குழுவுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த குழு யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என அதிமுக தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தெரிவிக்கிறார்கள்.
சரி, இப்போதுள்ள சூழ்நிலையில் எதற்காக எடப்பாடி பழனிச்சாமியை காப்பாற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வரும் மர்ம சாவுகளில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ், தற்போது விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் காண்ட்ராக்டர் சுப்பிரமணி என அடுத்தடுத்து மர்மச்சாவு பற்றி எதிர்க் கட்சித் தலைவர் கேட்பது நியாயம் தானே, இறந்துபோன சுப்பிரமணி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டியவர்.
எடப்பாடி பழனிச்சாமியினுடைய அமைச்சரவையைச் சேர்ந்த பலபேருக்கும் வேண்டியவர் என இந்த எம்எல்ஏக்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நிகழ்ந்துள்ளது தற்கொலை என்றாலும், அது நிர்பந்த கொலைதான் என அதிமுகவினர் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.