என் தம்பி மேலே கை வைச்சுட்டீங்களா ? பழி வாங்காமல் விடமாட்டேன் !! கோபத்தில் கொந்தளித்த ஓபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2018, 7:43 AM IST
Highlights

துணை முதலமைச்சரின்  தம்பி ஓ.ராஜா, கட்சியில் இருந்து நீக்குவதற்கு  ஓபிஎஸ் கடும் தெரிவித்தபோதிலும், அவரை கொஞ்சமும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால கோபத்தில் கொந்தளித்த ஓபிஎஸ், தனது தம்பியை கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு இபிஎஸ்ஐ பழிவாங்காமல் விடமாட்டேன் என கறுவிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்

மதுரை மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 8 டைரக்டர்கள் சேர்ந்துதான் கூட்டுறவுச் சங்கத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதில் 5 பேர் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்களோ அவரே தலைவர்.

8 பேரில் மூன்று பேர் தினகரன் அணியில் இருக்கிறார்கள். அந்த மூன்று பேரின் வீட்டுக்கும் சென்ற ஓ.ராஜா இவர்களிடம் பேசியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக தினகரனிடமும் ராஜா பேசியதாக கூறப்படுகிறது.  அதன் பிறகு அந்த மூன்று டைரக்டர்களும் ராஜாவுக்கு ஆதரவாக வாக்களித்ததிருக்கிறார்கள். இது அத்தனையும் ஆதாரங்களுடன் எடப்பாடி கையில் இருந்திருக்கிறது. இந்த ஆதாரங்களை காட்டியே எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்சிடம் கட்சியைவிட்டு நீக்குவதற்கு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

தம்பியை நீக்குவதற்கு கையெழுத்துப் போட்டாலும் ஓபிஎஸ்சின் டென்ஷன் குறையவே இல்லையாம். ‘என் தம்பியை என்னை வெச்சே நீக்க வெச்சுட்டாங்க... என்னையும் என் குடும்பத்தையும் எப்படி ஓரங்கட்டலாம்னு எடப்பாடி பார்த்துட்டு இருந்தாரு. அதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிடுச்சு என குமுறுயுள்ளார்..

இவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க மேல எவ்வளவு பிரச்னைகள் வந்துச்சு. யாரு மேல என்ன நடவடிக்கை எடுத்தாரு? என்னோட குடும்பம் என்பதால் பிரச்னை பண்றாரு. அவன் மேலயும் தப்பு இருக்கிறதால நான் வாய் திறக்காமல் இருக்கேன்...’என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் ஓபிஎஸ்.

இதையடுத்து தனது மகன் மூலமாக ஓ.ராஜாவிடம் பேசிய ஓபிஎஸ் ‘நான் எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவே இல்லை. எல்லா ஆதாரங்களையும் கையில் வெச்சுக்கிட்டு எடப்பாடி கேட்கும் போது என்னால பதில் சொல்லவே முடியலை.

இப்போதைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இரு. அப்புறம் பார்த்துக்கலாம்..’ என்று சொல்லிச் சமாதானப்படுத்தியிருக்கிறார். ராஜா எந்தப் பதிலும் சொல்லவே இல்லையாம். ‘இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைக் கட்சியை விட்டு நீக்கியதாக அறிவிப்பு வரும்.’ என்று தம்பிக்குச் சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார் பன்னீர்.

அதே நேரத்தில் கண்டிப்பாக நேரம் பார்த்து இபிஎஸ்சை பழிவாங்கியே தீருவேன் என ஓபிஎஸ் சவதம் எடுத்துள்ளாராராம்.

click me!