விஜயகாந்த் மண்டபத்தை மொத்தமாக இடிக்கும் அரசு!! தேமுதிகவினர் அதிர்ச்சி...

By sathish k  |  First Published Dec 19, 2018, 9:45 PM IST

தேமுதிக அலுவலகமாக இருக்கும் விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை  மொத்தமாக இடிக்கப்போவதாக வந்துள்ள செய்தி தேமுதிகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 


கோயம்பேடு பஸ் ஸ்டேண்ட் இருக்கும் பகுதியில் டிராபிக் ஜாம்  ஏற்படுவதால், நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட முடிவு  செய்தது அன்றைய திமுக அரசு. அப்போது  விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம்  இடையூறாக இருப்பதால் மண்டபத்தில் பாதியை அப்படியே  இடித்துவிட்டு இடத்தைக் கைப்பற்றினர்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து மண்டபத்தை இடிக்க  வேண்டாம் என கெஞ்சினார். அதற்கு மாற்று வழியையும் சொன்னார் ஆனால் விஜயகாந்த்தின் கோரிக்கையை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல் மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது.  இந்த பகையை மனதில் வைத்தே, திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி போட்டு, திமுக சரித்திரத்தில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்தார்.  இந்த பகையை மனதில் வைத்தே,  கடைசியாக நடந்த தேர்தலில் கூட கூட்டணி வைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

கம்பீரமாக இருந்த அந்த மண்டபத்தின் பாதியை பறிகொடுத்துவிட்டு, மிச்சம் இருக்கும், சொச்சத்தில் கட்சி அலுவலகமாக மாற்றி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் இடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 

ஆமாம் தற்போது, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிர்வாக பணி  நடந்து வருகிறது. அதற்காக கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கம் செய்ய  இருப்பதால், அங்கு இடையூறாக உள்ள கடைகள், வீடுகள் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இடத்தை கைப்பற்றும் அரசு அதற்கான இழப்பீட்டை தரவும் முடிவு செய்துள்ளது. இப்படி கையகப்படுத்தும் நிலங்களில் லம்ப்பாக அடிவாகுவது விஜயகாந்தின் மண்டபம் தான். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மண்டபம் இருக்கும் அதே இடத்தில் தான் மெட்ரோ ஸ்டேஷன் அமைக்க இருக்கிறார்களாம்.

ஏற்கனவே உடல்நலம் சரி இல்லாமல் இருக்கும் விஜயகாந்த்திடம் மண்டபம் இடிக்கப்படும் விஷயத்தை  சொன்னபோது மனுஷன் ரொம்பவும் ஒடிஞ்சு போய் விட்டாராம். விஜயகாந்த் தனது தாய் தந்தை பெயரில் ஆசை ஆசையாக கட்டிய மண்டபம், அதுமட்டுமா? இந்த மண்டபம் தேமுதிக என்ற கட்சிக்கு அடையாளம் என்றே சொல்லலாம். 

click me!