‘சசிகலா பழனிசாமி அமரச் சொன்னால் கூட பின்னால் கையை கட்டி நின்று கொண்டிருப்பார். ஜாதி வெறி பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அலைகிறார்’ என்று கூறியுள்ளார் அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்த பிறகு சசிகலா டிடிவி தினகரனை ஓரம் கட்டி விட்டு ஓபிஎஸ் உடன் கைகோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போதிருந்தே இலை மறை காயாகவே மோதல் நீடித்து வந்தது.
பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சட்ட போராட்டங்கள் மூலம் அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார்.
இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’
தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவி அதிர்ச்சியை கொடுத்தார் மைத்ரேயன். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ். அப்போது பேசிய அவர், ‘41 ஆயிரம் கோடி ஊழல் பற்றி ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட வேண்டிய நேரத்தில் வெளியிடுவார். அப்போது எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்க மாட்டார், சிறையில் இருப்பார்.
ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் ஒண்ணுமே செய்ய முடியாது.சசிகலா இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்க்கை இல்லை. சசிகலா பழனிசாமி அமரச் சொன்னால் கூட பின்னால் கையை கட்டி நின்று கொண்டிருப்பார். ஜாதி வெறி பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அலைகிறார். குடும்பத்தோடு குமாளம் போடும் கட்சி தான் திமுக.
இதையும் படிங்க..நாங்கள் தான் ஆணுறையை அதிகம் பயன்படுத்துகிறோம்.. மோகன் பகவத்துக்கு பதிலடி கொடுத்த ஓவைசி’
அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் திமுக தாங்காது. அதிமுகவின் கடந்த கால வரலாறு பற்றி திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. அவர் அப்போது பால்குடித்து கொண்டு இருந்து இருப்பார்’ என்று அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதையும் படிங்க..திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை..பேச தயாரா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்