ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு.. டாக்டர் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 9, 2024, 7:10 AM IST

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார்.


நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் கூட்டத்தில் பங்கேற்க இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார். நேற்று முன்தினம் மாலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: #BREAKING: விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? அவருக்கு சொந்தமான 3 சூட்கேஸ்கள் கண்டெடுப்பு!

பின்னர் நெல்லை தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் புறப்பட தயாராக இருந்துள்ளார். அப்போது திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டத்தில் பங்கேற்காமல்  ஓ.பன்னீர்செல்வம் ஓட்டல் அறையிலேயே ஓய்வு எடுத்தார். 

இதையும் படிங்க: தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசு...கிண்டல் செய்து பொதுமக்களிடம் அல்வா கொடுத்த திமுகவின் தரமான சம்பவம்

இதனையடுத்து தனியார் ஓட்டலுக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் ஓபிஎஸ்ஐ பரிசோதனை செய்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை ஓய்வு எடுக்கும் படி அறிவுரை வழங்கினர். பின்னர் கூட்டம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. 

click me!