அய்யோ இது தமிழ்நாட்டுக்கு புதுசு.. ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. தலையில் அடித்துக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ்.

Published : Mar 26, 2022, 05:20 PM IST
அய்யோ இது தமிழ்நாட்டுக்கு புதுசு.. ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. தலையில் அடித்துக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ்.

சுருக்கம்

காவல்துறை விசாரணையின் முடிவில் தான் இதை உறுதி செய்ய இயலும். மின்சார இரு சக்கர ஊர்தியும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் ஆகும். 

மின்சார இருசக்கர ஊர்தியும் அதில் மின்னேற்றம் செய்யும் முறையும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம், அத் தொழில்நுட்பம் பழகும்வரை மின் ஊர்திகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் சின்ன அல்லாஹ்புரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை மகள் உயிரிழந்துள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் அவ்வாறு எச்சரித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார் பைக்  உற்பத்தியில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது  எலக்ட்ரிக் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகந்துள்ளது. வேலூர் சின்ன அல்லா புரம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக இருந்து வந்தவர் துரைவர்மா இவர் நேற்று இரவு புதிதாக வாங்கிய தனது எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ்ஜி போட்டு விட்டு உறங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி வெடித்தது.

இதனால் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் புகை மூட்டமானது, பைக் வெடித்த சத்தம் கேட்டு துரை வருமா வெளியில் ஓடி வர முயற்சித்தார். அவரது 13 வயது மகளும் தீ விபத்திலிருந்து தப்பிக்க வீட்டின் கழிவறைக்குள் நுழைந்தார். ஆனால் புகை மூட்டம் காரணமாக தப்பிச் செல்ல முடியாமல் இருவரும் மயங்கி உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பலரும் எலக்ட்ரிகல்  வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் எலக்ட்ரிக்கல்  இரு சக்கர ஊர்திகளை கையாளுவதில் கவனம் தேவை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  தனது டுவிட்டர் பக்கத்தில்  அவர் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு:-  மின்சார இரு சக்கர ஊர்திகளை கையாள்வதில் கவனமும், எச்சரிக்கையும் தேவை, வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் மின்சார இருசக்கர ஊர்தி வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி  ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். மின்சார இரு சக்கர ஊர்தியை சார்ஜரில் இணைத்து விட்டு உறங்கியதால், அதிக மின்சக்தி ஏறியவுடன் அதை தாங்க முடியாமல் பேட்டரி வெடித்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

காவல்துறை விசாரணையின் முடிவில் தான் இதை உறுதி செய்ய இயலும். மின்சார இரு சக்கர ஊர்தியும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் ஆகும். அத்தொழில்நுட்பத்தை அனைவரும் பழகும் வரை மின்னூர்திகளை இயக்குவது, மின்னேற்றம் செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுகுறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!