கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இதுதான் நடக்கும்.. கொதிக்கும் சீமான்

Published : Jun 18, 2022, 06:06 PM IST
கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இதுதான் நடக்கும்.. கொதிக்கும் சீமான்

சுருக்கம்

Seeman : அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களை RSS ல் இணைக்க திட்டமா ? வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே RSS ல் தடி மற்றும் சீருடை அணிந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சீமான் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘ நீதியரசர் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவர்களுக்கு வழங்கலாம் என தெரிவித்துள்ளது ஆனால் மறுபடியும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. ஆட்சிக்கு வரும் முன் 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டார்கள். நளினி ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களின் நம்ப வைத்து கழுத்தறுத்ததுபோல் திமுகவின் செயல்பாடு உள்ளது. 

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

அக்னிபத் திட்டம் எதிர்ப்பு

இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும். அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுப்பது குறித்து பேசிய சீமான் கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும் போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆகவே கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இப்படித்தான் நடக்கும். அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களை RSS ல் இணைக்க திட்டமா ? வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே RSS ல் தடி மற்றும் சீருடை அணிந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

எடப்பாடி - பன்னீர்செல்வம்

அதிமுக ஒற்றை தலைமை பிரச்னை குறித்த கேள்விக்கு, அது அவர்கள் உள்கட்சி பிரச்சினை பேசி தீர்த்து கொள்வார்கள். கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அழைத்து திமுக நிகழ்ச்சி நடத்தியது. கலைஞர் சிலை திறக்க வேறு ஆட்களை கிடையாதா? பாஜக ஆளும் மாநிலத்தில் கூட பிரதமரையோ, துணை ஜனாதிபதியை போ அழைத்ததில்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் குறை கூறுவது நியாயம் இல்லை. திமுகவே பாஜகவாக இயங்குகிறது பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!