"கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆச்சு, முதலிரவே நடக்கல.. என் புருஷன் கம்மல் ஜிமிக்கி போட்டுக்கிறாரு".. கதறும் மனைவி.

Published : Jun 18, 2022, 05:32 PM IST
 "கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆச்சு, முதலிரவே நடக்கல.. என் புருஷன் கம்மல் ஜிமிக்கி போட்டுக்கிறாரு".. கதறும் மனைவி.

சுருக்கம்

கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும்  தனக்கும் கணவருக்கும் இடையே தாம்பத்திய உறவு நடக்கவில்லை என மனைவி குற்றம்சாட்டியுள்ளார். தனது கணவன் அடிக்கடி  நெத்திச்சூடி அணிந்து மேக்கப் போட்டு கொள்வதாகவும் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.  

கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும்  தனக்கும் கணவருக்கும் இடையே தாம்பத்திய உறவு நடக்கவில்லை என மனைவி குற்றம்சாட்டியுள்ளார். தனது கணவன் அடிக்கடி  நெத்திச்சூடி அணிந்து மேக்கப் போட்டு கொள்வதாகவும் மனைவி புகார் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சுடியா பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு திலேஷ்வர் (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த 2018 ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு மனைவியை திலேஸ்வர் புனேவுக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் திடீரென அந்தப் பெண் இந்தூர் வந்து மகிலா காவல் நிலையத்தில் தனது கணவன், மாமியார், நாத்தனார் மீது புகார் கொடுத்தார். போலீசார் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து  கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், 

எல்லா பெண்களையும் போலவே, நானும் பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணம் செய்தது முதல் என் கணவர் மிகவும் வித்தியாசமாக நடந்து கொண்டார். எப்போதும் தன்னிடமிருந்து விலகியே இருந்தார், எங்கள் இருவருக்கும் இடையே திருமணத்திற்குப் பின்னர் நெருக்கும் அதிகரிக்கவே இல்லை, நான் நெருங்க முயற்சிக்கும் போதெல்லாம் அவர் என்னை உதறி தள்ளி விட்டு வேறொரு அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொள்ளுவார், இதனால் என் கணவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, அவரை தொடர்ந்து நான் கண்காணித்து வந்தேன், இந்நிலையில் ஒரு நாள் நான் எதிர் பாராத உண்மை எனக்கு தெரிந்தது, ஒரு நாள் என் கணவர் அந்த அறைக்குச் சென்று தன்னை ஒரு பெண் போல பாவித்து பெண்கள் அணியும் ஹேர் பேண்ட், பிந்தியா, நெத்திச்சூடி, காதணிகள், உதட்டுச்சாயம் போன்றவற்றை பயன்படுத்தி மேக்கப் போட்டுக் கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதைப் பார்த்து எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை சரமாரியாக தாக்கினர். என்னை புனேவில் இருந்து அழைத்து வந்து இந்தூரில் விட்டுச் சென்றனர். அதன் பிறகு மீண்டும் என்னை அழைத்துச்செல்ல வரவே இல்லை, இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன், மேலும் மகளிர்,குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம்,  நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்  குடும்ப வன்முறைக்கு நான் ஆளாக்கப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என என் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

அந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரின் அடையாளங்களையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பித்த முதல் வழக்கு இதுவாகும், பெண்களைப் போலவே தனது கணவர் மேக்கப் போட்டுக் கொள்வதாக அந்த பெண் கூறியுள்ளார். அவரது கணவரைப் போலவே இன்னும் சிலர்பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் மாலைநேரத்தில் பெண்களைப் போலவே ஆடை உடுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். அது தொடர்பான படங்களையும் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை