Seeman : திமுக ஊழல் ஓகே.. அதிமுக ஊழலை எப்போ பேசுவீங்க அண்ணாமலை ? சீமான் அதிரடி பேட்டி!

By Raghupati R  |  First Published Jun 11, 2022, 7:37 PM IST

Seeman : சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பது எதற்கு அரசின் செயல் மக்களை சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையில்லாத ஒன்றாகும். மத்திய அரசின் 8 ஆண்டுகாலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை சோதனை. 


சீமான் Vs அண்ணாமலை

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவு தினம் நெல்லை ரஹ்மத் நகரில் வைத்து அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பெருஞ்சித்தனார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.7,000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன் ? இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா ? என்று தெரியவில்லை. 

Tap to resize

Latest Videos

சீனாவின் ஒரு மாகணமாக இலங்கையை மாற்றிவிட்டது. இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கூட சீன எழுதுக்கள் இடம்பெற்றுள்ளது.18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவிற்கு கட்சதீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை. இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க நினைக்கிறார்கள். சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பது எதற்கு அரசின் செயல் மக்களை சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையில்லாத ஒன்றாகும்.

திமுக - அதிமுக ஊழல்

மத்திய அரசின் 8 ஆண்டுகாலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை சோதனை. ஓராண்டு  திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை.2024 தேர்தலில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா? திமுக பாஜகவின் பி டீம் அல்ல அவர்கள் தான் மெயின் டீம்.8 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை என செய்யவில்லை என செல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து வாய்திறக்கவில்லையே ஏன் ?

பாஜக

பாஜக ஆளும் 20 மாநிலங்களில் ஊழல் நடைபெறாமல் இருக்கிறது. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சிகாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது.2024 ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் அதுவும் கிடைத்தால் 7 லிருந்து 10% ஆக வாக்குவங்கி உயரம் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!

இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்

click me!