என்.பி.ஆர் கணக்கெடுப்பு... டெல்லிக்கு அலறி ஓடிய அதிமுக அமைச்சர்கள்... அதிர்ச்சி கொடுத்த அமித் ஷா..!

Published : Mar 07, 2020, 05:14 PM IST
என்.பி.ஆர் கணக்கெடுப்பு... டெல்லிக்கு அலறி ஓடிய அதிமுக அமைச்சர்கள்... அதிர்ச்சி கொடுத்த அமித் ஷா..!

சுருக்கம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பாதிப்பை ஏற்படுத்துமா என ஒரு 'சர்வே' எடுக்கலாம் என ஆளுங்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். 

தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்து விட்டார். தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பில் தமிழகத்துக்கு மட்டும், சில கேள்விகளுக்கு, விலக்கு கொடுக்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் தங்கமணியும், ஜெயகுமாரும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அமித் ஷா, இது தேசிய அளவிலான திட்டம். 

மாநிலத்திற்கு மாநிலம் மாற்றிக்கொள்ள முடியாது’’என கறாராக சொல்லி விட்டாராம். இதனால், தமிழக அமைச்சர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து இருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்புக்கு, தமிழக மக்களிடம் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பாதிப்பை ஏற்படுத்துமா என ஒரு 'சர்வே' எடுக்கலாம் என ஆளுங்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். 

அப்படியே சர்வே எடுத்து பின்னடைவை ஏற்படுத்தும் என ரிசல்ட் வந்தால் மட்டும் என்ன அதிமுக - பாஜக அரசை எதிர்க்கவா போகிறது? இதற்கு எதற்கு சர்வே என மற்றொரு தரப்பு தலையிலடித்துக் கொள்கிறது. 

PREV
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!