யார் பற்றவைத்தார்களோ அவர்களே இதை அணைக்க வேண்டும்..!! சூட்சுமமாக சுட்டிகாட்டிய மன்மோகன் சிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2020, 4:55 PM IST
Highlights

பிரச்சினையைக் கையாளும் பொறுப்பை அந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் .  பிரதமர் மோடி வழக்கம் போல வெறும் வார்த்தைகளால்  அல்லாமல் தனது செயல்களால் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் . 
 

பொருளாதார மந்த நிலை ,  கலவரம் ,  கொரோனா வைரஸ் பீதி என மும்முனை ஆபத்துக்கள்  இந்தியாவை தாக்கி வருகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.   இந்தியா தற்போது சந்தித்துள்ள நெருக்கடி குறித்து  மன்மோகன் சிங் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் .  அதில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம் மோசமான பொருளாதார நிர்வாகம் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் ஆகிய மூன்று விதமான ஆபத்துக்களும் இந்தியாவை சூழ்ந்துள்ளது .  சமூக விரோதிகளும் அரசியல்வாதிகளும் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி விடுகின்றனர் , பல்கலைக்கழக வளாகங்கள் பொது இடங்கள், வீடுகள் என எல்லாவற்றிலும் மத வன்முறை கோரத்தாண்டவம் ஆடுகிறது.  

இது இந்திய வரலாற்றில் இருண்ட பக்கம் என்றே கூறலாம்,  சில ஆண்டுகளுக்கு முன்பு உலகத்துக்கே முன்னுதாரணமான பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியா தற்போது பொருளாதார சீரழிவை சந்தித்து வருகிறது.  தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை  மத மோதல்கள் மேலும் அதிகரிக்கச்  செய்துள்ளது .   முதலீட்டாளர்கள் புதிய திட்டங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர் .  மத மோதல்கள் அவர்களின் அச்சத்தை அதிகப்படுத்துகிறது . கொரோனாவைரசைப்  பொறுத்தவரை மத்திய அரசு உடனடியாக ஒரு  அவசர குழுவை உருவாக்க வேண்டும்.  பிரச்சினையைக் கையாளும் பொறுப்பை அந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் .  பிரதமர் மோடி வழக்கம் போல வெறும் வார்த்தைகளால்  அல்லாமல் தனது செயல்களால் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் . 

இந்த ஆபத்திலிருந்து மீல நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளிக்க வேண்டும் .  முதலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் . குடி உரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் ,  அல்லது திருத்தி அமைக்க வேண்டும்.  நுகர்வு தேவை அதிகரித்து பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய சலுகைகளை அறிவிக்க வேண்டும்.  அதேபோல் வன்முறையின் மூலம் மக்களை பாதுகாக்க வேண்டிய தர்மத்தை பாதுகாப்பு படைகள் கைவிட்டு விட்டனர் .  நீதித்துறையும் , ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கைகளும்  கூட நம்மை கைவிட்டு விட்டனர் .  சமூகப் பதற்றம் அதிகரித்து நாட்டின் ஆன்மாவை அச்சுறுத்தி வருகிறது .  இதை  யார் பற்ற வைத்தார்களோ அவர்களால்தான் இது அணைக்க முடியும் என  மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் .
 

click me!