இது வெறும் சாம்பிள்தான்...! இனிமேல்தான் மெயின் போராட்டம் இருக்கு...! களத்தில் குதித்த பாரதிராஜா...!

First Published May 22, 2018, 2:46 PM IST
Highlights
Now there is a major struggle - Bharathiraja


தூத்துக்குடியில் போராடும் அனைவரும் தங்களின் மண்ணுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், காவல் துறை நடத்தும் அராஜகம் பெரும் கண்டனத்துக்குரியது என்றும், இனிமேல்தான் மிகப்பெரிய போராட்டமே நடைபெற உள்ளது காத்திருங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக்
கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 

100 நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத்தில் பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட அடித்து நொறுக்கியும், தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து, கண்ணாடிகளை உடைத்தும், வாகனத்தை எரித்தும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தினர். இதுவரை 4 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், தூத்துக்குடி மக்களின் நிலை குறித்தும் தயாரிக்கப்பட்டுள்ள தடை அதை உடை என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல் குறுந்தகட்டை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் வெளியிட இயக்குநர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

இதன் பிறகு, இயக்குநர் பாரதிராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது என நாடு, என் காற்று, என் சமூகம், இதன் மீது ஒரு கீறல் விழுந்தால் கூட நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒன்று திரட்டி, பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றார். உங்களின் உரிமைகளை நான்கு முறை கேளுங்கள், அதற்கும் மேலே போனால் உடைத்து முன்னேறுங்கள். பயத்தினால்தான் அரசாங்கமே தடை விதிக்கிறது.

தூத்துக்குடியில் போராடும் அனைவரும் தங்களின் மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், காவல்துறை நடத்தும் அராஜகம் பெரும் கண்டதுக்குரியது. அவர்கள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை என அரசு புரிந்துகொள்ள வேண்டும். அரசு, தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை விளைத்து வருகிறது. ஆறு, மண், மொழி என அனைத்தையும் சீரழிக முயற்சித்து வருகிறது. சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலை திட்டத்தில் மிகப் பெரிய அரசியல் உள்ளது. ஏன், சேலம் முதல் சென்னை வரை குமரி முதல் சென்னை வரை சாலை அமைக்கலாமே. ஏனென்றால், சேலம் முதல் சென்னை வரை அதிகமான மலைகள் உள்ள சாலை என்ற பெயரில் அரசு கனிம வளங்களைச் சுரண்ட உள்ளது. இது, மிகப் பெரும் கொள்ளை. இனிமேல் தான் மிகப்பெரிய போராட்டமே நடைபெற உள்ளது காத்திருங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

click me!