துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு! பெண் ஒருவரும் பலி! .. பலர் காயம்!

First Published May 22, 2018, 2:38 PM IST
Highlights
girl was killed in a gunfight


ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியே கலவரமானது. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 ஆண் ஒரு பெண் மொத்தம் 7  பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கல்வீச்சின் மூலம், ஆட்சியர் அலுவலகமே சூறையாடப்பட்டது.

போராட்டக்காரர்கள் ஆவேசத்தை பார்த்த, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் மக்களை விரட்டினர்.

அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 6 ஆண் மற்றும் ஒரு பெண் மொத்தம் நான்குபேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூட்டில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்வர்களில் நெஞ்சில் குண்டு காயம் பட்டு இறந்தவர் பெயர் ஜெயராமன் என்றும் அவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தீக்கிரையாக்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

click me!