மூவர் பலி... ஐந்து பேருக்கு குண்டடியுடன்... 100வது நாள் போராட்டம் கட்டுக்குள் வந்தது

Asianet News Tamil  
Published : May 22, 2018, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
மூவர் பலி... ஐந்து பேருக்கு குண்டடியுடன்... 100வது நாள் போராட்டம் கட்டுக்குள் வந்தது

சுருக்கம்

sterlite protest 3 people died

ஸ்டெர்லைட்க்கு எதிரான பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்டது.144 தடை உத்தரவை மீறி காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்தது. போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.

மேலும் கற்களை கொண்டுகாவல்துறையை தாக்கவும் செய்தனர். இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொழுத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்கார்ர்கள் தொடர்ந்து போராட முடிவு எடுத்துள்ளனர் எனத் தெரிந்த்தும் காவல்துறை கண்ணீர் குண்டு வீசியும், வஜ்ரா வாகனத்தை கொண்டு மக்களை விரட்ட முனைந்தனர்.

காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறங்கியது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். போலீஸ் தடியடி நடத்தியதில் மக்கள் பலர் காயமடைந்துள்ள்னர். ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர்.

மீண்டும் ஒன்று திரட்ட போராட கூடிய மக்களை கலைக்க இரண்டாவதுமுறை  வானை நோக்கி  மூன்று முறை சுட்டு போலீஸ் போராட்டக்காரர்களை கலைக்க தொடங்கியுள்ளது.

காவல்துறை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பான 6மாடி கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர்.

நடந்த துப்பாக்கி சூட்டில் மூவர் பலி… ஐந்து பேர் துப்பாக்கி சூட்டில் குண்டுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து காவல்துறையினர் குவிந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுகுள் வந்ததாக டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!