
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த
கூட்டத்தில் துணை முதலமைச்ச்ர, அமைச்சர்கள், தலைமை செயலாளர் டிஜிபி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் பேரணியில் சென்றவர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள்னர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட அடித்து நொறுக்கியும், தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு நுழைந்த போராட்டக்காரரர்கள், ஆட்சியர் அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
அரசு வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக
கூறப்படுகிறது. மேலும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி குடியிருப்பு ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர்
பங்கேற்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்து
ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.