இப்போ தான் சரியா சம்பளம் போய்ச்சேர்கிறது... மார்தட்டும் அமைச்சர் பெரியகருப்பன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 31, 2021, 3:29 PM IST
Highlights

முந்தைய ஆட்சியின்போது ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்க வேண்டும். 

அதிமுக அரசு தோல்வி பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார்.
 
ராணிப்பேட்டை, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’முந்தைய ஆட்சியின்போது ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தற்போது முறையாக ஊதியம் வழங்கப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார்.
 

click me!