அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் எங்களுக்கு என்ன? தமிழக பாஜகவை அதிர வைத்த கர்நாடக முதல்வர்.!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 3:26 PM IST
Highlights

மேககாது அணையை நாங்கள் கட்டியே தீருவோம். மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். 

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை தொடர்பாக கடிதங்கள் வாயிலாகவும், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றதுமே காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம்' என உறுதியாகத் தெரிவித்தார். கர்நாடக முதல்வரின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக பாஜக சார்பில், ஆகஸ்ட் 5ம் தேதி தஞ்சாவூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  மேககாது அணையை நாங்கள் கட்டியே தீருவோம். மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கவலை இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என கூறியுள்ளார்.

click me!