தமிழ் நாட்டிலேயே நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மாவட்டங்கள் இந்த இரண்டுதான்.. ஈரோடுக்கு கடைசி இடம்.

Published : Jul 31, 2021, 02:38 PM ISTUpdated : Jul 31, 2021, 05:59 PM IST
தமிழ் நாட்டிலேயே நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மாவட்டங்கள் இந்த இரண்டுதான்.. ஈரோடுக்கு கடைசி இடம்.

சுருக்கம்

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 888 ( cluster) இடங்களில் 26,610 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில் 17,624  பேர் அதாவது 66.2 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாகவும், அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது, 

தமிழகத்தில் 66.2 சதவிகிதம் நபர்களுக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக 3 வது குருதி சார் முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்றாவது குருதி சார் முடிவில் சென்னையில் 82 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாகவும், 

இரண்டாம் ஆய்வில் 42% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்த நிலையில் மூன்றாம் ஆய்வில் 82 சதவீதமாக அது அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா 2 ஆம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில் 3 ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் 3 ஆம் அலை வருவதற்கு முன்னதாகவே பல்வேறு தரப்பட்டவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா, இல்லையா, அதிகரித்திருப்பின் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை கண்டறிவதற்காக 3 ஆம் குருதி சார் ஆய்வை தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநியோகம் தலைமையில் நடத்தப்பட்டது. 

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 888 ( cluster) இடங்களில் 26,610 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில் 17,624  பேர் அதாவது 66.2 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாகவும், அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது, அதேபோல குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 49% ஆகவும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13% ஆகவும் இருந்தது.

கொரோனோ இரண்டாவது அலை பரவலின் போது  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் ஆகியவை காரணமாக ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் குறித்து இரண்டாவது கட்ட SERO சர்வே அண்மையில் நடத்தப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் முதல் மார்ச் வரை நடத்தபட்ட இந்த ஆய்வில்  நோய் எதிர்ப்பு சக்தி 31% லிருந்து 23% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது மூன்று அலை வருவதற்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட ஆய்வின்  முடிவில் 66.2 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது, விருதுநகர் மாவட்டத்தை அடுத்து சென்னை இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!