திமுகவால்தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைத்தது.. மார்தட்டும் தயாநிதி மாறன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2021, 2:10 PM IST
Highlights

எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு, கோவில் நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால் அதை மீட்டெடுப்போம். இதுவரை நாங்கள் பதவியேற்றதிலிருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களை மீட்டுள்ளோம்

திமுக தொடர்ந்து வலியுறுத்தியதால்தான் மருத்துவபடிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது என தயாநிதி மாறன் எம்.பி தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில்  அம்பேத்கார் விளையாட்டு திடல் மேம்படுத்தப்பட்டு இன்று இளைஞர்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக விளையாட்டு திடல் முன்பாக இருந்த அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் விளையாட்டு மைதானத்தில் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய தயாநிதி மாறன், அனைத்து விளையாட்டுகளையும் மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். மருத்துவ படிப்பில் 27 சதவீத ஒதுக்கீட்டை திமுக தொடர்ந்து நீதிமன்றம் வரை சென்று வலியுருத்தியதால் தான் மத்திய அரசு முன்வந்து அறிவித்துள்ளது. 7ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக இட  ஒதுக்கீட்டை  கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். 

நீட் தேர்வை அமல்படுத்த கூடாது என்பதில் திமுக தீர்க்கமாக உள்ளது. என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் சிலர் பயிற்சி பெற்றுள்ளனர். விரைவில் அனைவரும் பயிற்சி பெற்று அர்ச்சகர் பணியை செய்வார்கள். எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு, கோவில் நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால் அதை மீட்டெடுப்போம். இதுவரை நாங்கள் பதவியேற்றதிலிருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களை மீட்டுள்ளோம் என்றார்.

 

click me!