அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியை பறிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்சை நீக்கிய இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்களை நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பூட்டப்பட்ட நிலையில் யாருக்கு தலைமை அலுவலகம் என நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி, பொருளாளர பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி என அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் உள்ளார். அந்த பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பொன்னையன் நீக்கமா..? இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்
எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்
இதற்காக வருகிற 17 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.இந்த கூட்டத்தில் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்க தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.ஓ.பன்னீர் செல்வத்தின் சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் நத்தம் விஸ்வநாதன் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கொறடாவாக எஸ்.பி.வேலுமணியே தொடருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கூட இருப்பவர்களே முதுகில் குத்த போறாங்க..! எடப்பாடி பழனிசாமியை அலர்ட் செய்யும் திமுக எம்.பி
துணை தலைவர் நத்தம் விஸ்வநாதன்
இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை நீக்கியதற்கான கடிதத்தையும் வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் தனித்து செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்