12 வருஷம் வாய்ப்பு கொடுத்தும் பாஸ் பண்ணல.. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை எச்சரித்த நீதிபதி.

Published : Apr 07, 2022, 06:45 PM IST
12 வருஷம் வாய்ப்பு கொடுத்தும் பாஸ் பண்ணல.. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை எச்சரித்த நீதிபதி.

சுருக்கம்

12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல் படுத்தப் படாமல்  தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணியில் அனுமதித்துள்ள பள்ளிக்கல்வித்துறையை கண்டித்தார்.  

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கவே தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என அறிவித்து 12  ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், அப்படிபட்டவர்கள் ஊதிய உயர்வு பெற  உரிமை அற்றவர்கள் என்றும்  நீதிபதி கூறியுள்ளார்.

மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படிதான் ஆசிரியர்கள் சேமிக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் 2011ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை  நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். நீதிபதி கிருஷ்ண குமார் விசாரித்தார். இந்த விசாரணையின் போது,

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது, ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல் படுத்தப் படாமல்  தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணியில் அனுமதித்துள்ள பள்ளிக்கல்வித்துறையை கண்டித்தார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும், அவர்களுக்கு ஊதிய உயர்வு பெற தகுதி இல்லை என்றும் அவர் எச்சரித்தார். அறிவு திறமை தொழில்நுட்பம் என அனைத்திலும் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்றும், தரமான ஆசிரியர்களால் நடத்தப்படும் கல்வியே அவசியம் என்றும் அவர் கூறினார். அப்போது ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும், இது சம்பந்தமாக அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!