அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை... கண்டபடி பேசி ஸ்டாலினை காண்டு ஏத்திய சி.வி சண்முகம்.

Published : Apr 07, 2022, 06:07 PM ISTUpdated : Apr 07, 2022, 06:12 PM IST
அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை...  கண்டபடி பேசி ஸ்டாலினை காண்டு ஏத்திய சி.வி சண்முகம்.

சுருக்கம்

இந்தியாவிலேயே தான்தான் சிறந்த முதலமைச்சர் என  தனக்குத் தானே பட்டம் சூட்டி கொள்கிறார், அப்படிப்பட்டவரால் ஏன் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.

அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளைதான் மு.க ஸ்டாலின் என விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சி.வி சண்முகம் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தான் 2008 ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது என்றும், அதேபோல முதலமைச்சராக வந்தவுடன் ஸ்டாலின் சொத்து வரியை உயர்த்தி உள்ளார் என்றும் அவர் விமர்சித்தார். 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது அதை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் திமுக அரசு மீது இருந்து வருகிறது. அதிமுக- பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என விமர்சிக்கின்றன. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார். 

போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த சி.வி சண்முகம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிலேயே தான்தான் சிறந்த முதலமைச்சர் என  தனக்குத் தானே பட்டம் சூட்டி கொள்கிறார், அப்படிப்பட்டவரால் ஏன் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. அரசாங்கத்தில் பணம் இல்லை என்பது காரணமல்ல, அந்த திட்டம் புரட்சித்தலைவி அம்மாவால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான், பெண்கள்தான் அதிமுகவின் வாக்கு வங்கி, எனவே அவர்களுக்கு எதையும் வழங்கக் கூடாது என்ற வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் இப்படி நடந்து கொள்கிறார். பெண்களின் தாலியை பறித்த கட்சி திமுக,  கூட்டு பாலியல் வன்கொடுமை தான் இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கிற பரிசு. அன்றாடம் செய்தித்தாள்களை திறந்தாலே பாலியல் வன்கொடுமை செய்திகளே நிறைந்திருக்கிறது. 

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்த போது வைகோ, திருமாவளவன் வாய்கிழிய பேசினர்,  அப்படிப்பட்டவர்கள் திமுக ஆட்சியில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஏன் மௌனமாக இருக்கிறார்கள். வைகோ, திருமாவளவன் திமுகவின் அராஜகத்தை தட்டிக்கேட்க முடியாமல் இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டது, அவரைப் போலவே ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலினும் 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளார். அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாகவே ஸ்டாலின் உள்ளார். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான  காவல்துறை என கூறப்படுவதுண்டு, ஆனால் இன்று தமிழக போலீஸ் சிரிப்பு போலீசாக மாறிவிட்டது. அதற்கு காரணம் திறமை இல்லாத முதலமைச்சர் இருப்பதால் போலீஸும் திறமை இல்லாத போலீசாக மாறிவிட்டது என அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!