ஆளும் கட்சி மட்டும் அல்ல ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தது.. அதிமுகவை டாராக கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 11:50 AM IST
Highlights

தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளை பெற பணத்தை வாரி இறைத்தது, எனவே இந்த வெற்றியை நெருக்கடிக்கு மத்தியில் போராடிப் பெற்ற வெற்றி எனக் கூறியுள்ளார். அதாவது ஆளும் திமுகவை அவர் விமர்சித்துள்ள அதே நேரத்தில் ஆண்ட கட்சி என அதிமுகவையும் விமர்சித்துள்ளார் என்பது கவனிக்கப்பட தக்கதாக உள்ளது. 

நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள், போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கும் பாராட்டுக்கள் என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார். தனித்து களம் கண்டு உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 138 மாவட்ட கவுன்சிலர்கள், 1375  ஒன்றிய கவுன்சிலர்கள், 2779 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 19 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. 

இதையும் படியுங்கள்:  காவல் நிலையத்தில் பாலியல் வக்கிரம்.. பெண் டைப்பிஸ்டின் உதட்டை கடித்த காக்கி வெறிச் செயல்.. இது போலீசா? இல்ல???

இந்நிலையில் பாமக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு 47க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது. இதுகுறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளா அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில், பெருமளவில் பாமகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையும், பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆற்றிய பணிகளையும் ஒப்பிடும்போது, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளை பெற பணத்தை வாரி இறைத்தது, எனவே இந்த வெற்றியை நெருக்கடிக்கு மத்தியில் போராடிப் பெற்ற வெற்றி எனக் கூறியுள்ளார். அதாவது ஆளும் திமுகவை அவர் விமர்சித்துள்ள அதே நேரத்தில் ஆண்ட கட்சி என அதிமுகவையும் விமர்சித்துள்ளார் என்பது கவனிக்கப்பட தக்கதாக உள்ளது. 

இதையும் படியுங்கள்: டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 35.47 கோடி ரூபாய் அபராதம்.. தலை சுற்ற வைக்கும் தெற்கு ரயில்வே.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி, நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுகள், தேர்தலில் வாக்களித்தவர்களுக்கும் நன்றி, நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 47க்கும் மேற்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர்கள்,  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என அதிக அளவில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம், தனித்து களம் கண்டு உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.
 

click me!