சசிகலாவால் கைவிடப்பட்ட சுதாகரன் விடுதலை எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 14, 2021, 11:22 AM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சுதாகரன் வருகிற 16ம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் நீதிமன்றத்தில் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். 

அதேநேரம், சுதாகரன் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தவில்லை. இதனால், கூடுதலாக ஒரு வருடம் தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், வருகிற 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலையாக இருந்தார். ஆனால், இந்த வழக்கு நடைபெற்ற காலக்கட்டத்தில் சுதாகரன் சிறையில் இருந்த நாட்களை கணக்கு போட்டு அவரது சிறை தண்டனை காலத்திலிருந்து 89 நாட்களைக் கணக்கில் கொண்டு அதற்கு விளக்கு அளிக்குமாறு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. 

அந்த உத்தரவின் படி 89 நாட்கள் கழிக்கப்பட்டு அக்டோபர் 16ம் தேதியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அன்றை தினம் காலையிலேயே சுகாதாரன் விடுதலை செய்யப்படுவார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. 

click me!