உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள 18 மடாதிபதிகளில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "டாஸ்மாக் கடைகளால் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடும் வரையில் புதிய தமிழகம் போராட்டத்தை நடத்தும். புதிய தமிழகம் கட்சியின் 26ம் ஆண்டை முன்னிட்டு டிசம்பர் 15ல் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.
undefined
அக்டோபர் 2 முதல் தமிழகம் முழுக்க மது ஒழிப்பு பிரசாரத்தை நடத்த உள்ளோம். சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறவில்லை. சனாதனத்தில் உள்ள குறைபாடுகளை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டவில்லை. நீதிமன்றமே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர வேண்டும். கருத்துகளால் மக்களை பிளவுப்படுத்த திமுக நினைக்கிறது. சனாதனம் சொல் அளவிலும், எழுத்து அளவிலும் எந்தவொரு தவறுமில்லை.
ஒகேனக்கல் காவிரி கரையோரம் இளம் காதல் ஜோடி விபரீத முடிவு; காதலன் பலி, பள்ளி மாணவி கவலைக்கிடம்
உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள 18 மடாதிபதிகளில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. கண்ணியம், கட்டுப்பாடு, அன்பை உள்ளடக்கியதே சனாதனம். சனாதனம் குறித்த பேச்சுக்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் சனாதனம் குறித்து பேச கூடாது. இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் அம்மக்களின் கோரிக்கை. ஆனால் திமுக தேவேந்திர குல வேலாளர் மக்களிடம் ஒளிந்து கொள்வதற்காக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதில் காவல்துறை குளருபடி செய்துள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை மரியாதை செலுத்தவிடவில்லை" என கூறினார்.
தமிழ்நாட்டையே ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு