என் தம்பியை பார்க்கப் போனது ஒரு குத்தமா..? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க Mr.ஸ்டாலின்.. கடுப்பான எஸ்.பி வேலுமணி

By Raghupati RFirst Published Mar 16, 2022, 6:26 AM IST
Highlights

எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று  காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

மீண்டும் சோதனை :

வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், எஸ்.பி வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம், 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணி கிரிப்டோகரன்சியில் ரூ.34 லட்சத்திற்கு முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது செல்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

எஸ்.பி வேலுமணி பேட்டி :

அப்போது பேசிய அவர், ‘ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அரசு தூண்டுதலின் பேரில் எனது வீட்டிலும் ,எனது சகோதரர் வீடு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என்னுடன் பழகியவர்கள் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று உள்ளது. இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளது. ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற சோதனை நடைபெற்றது.

இப்போது மீண்டும் 2-வது முறையாக சோதனையை நடத்தி உள்ளனர். எனது வீட்டில் இருந்து எந்த பொருளையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றவில்லை. கடந்த முறையும் கைப்பற்றவில்லை. இந்த முறையும் கைப்பற்றவில்லை. ஆனால் நகை பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியிட்டுள்ளனர். இது தவறானது. வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுகிறார்கள். 

பொதுவாக கோவை மாவட்டத்தில் அதிமுக 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக திமுக அரசு வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டுள்ளது. முன்னாள் முதல்  அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடைபெற்றது. இதை மு.க ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர முயன்றார். அது நடக்கவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் முழுக்க முழுக்க திமுக முறைகேடாக வெற்றி பெற்றது. அதிமுகவை நசுக்க வேண்டும் என்று திமுக செயல்படுகிறது. இந்த ரெய்டு குறித்து சட்ட ரீதியாக அணுகுவோம். எல்லோருக்கும் பொதுவானவராக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பழிவாங்குகிறார், எனது சகோதரர் வெளிநாட்டில் உள்ளார். 

அவரது குடும்பத்திரை பார்க்க எனது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றால் கூட தவறான தகவல்களை பரப்புகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்வோம்’ என்று கூறினார்.

click me!