என்னைத் தவிர எனது குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்... உறுதிப்பட தெரிவித்த அதிமுக அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Dec 22, 2020, 3:08 PM IST
Highlights

எனது மகனை இந்த தொகுதிக்கும், நான் பரமத்திவேலூரிலும் போட்டி யிடுவதாக தகவல் வெளியானது. என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் இனிமேல் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக, சாமானியர் ஆளும் ஆட்சியாக இருப்பதால் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்பபிரிவு மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டுபேசிய  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி :-பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதிமுக தலைமையிலான அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக, சாமானியர் ஆளும் ஆட்சியாக இருப்பதால் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதற்கு இதுவே உதாரணமாகும். 

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் மே மாதம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் சட்டக் கல்லூரியும், குமாரபாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைய உள்ளது. அதிமுக தலைமை அறிவித்தால் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் நான் போட்டியிடுவேன். ஆனால் ஒருசிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எனது மகனை இந்த தொகுதிக்கும், நான் பரமத்திவேலூரிலும் போட்டி யிடுவதாக தகவல் வெளியானது. என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் இனிமேல் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்துள்ளார். 

எந்த நேரத்திலும் என்னை பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். நான் தொண்டர்களையும் கட்சியையும் நம்பித்தான் செயல்பட்டு வருகிறேன். இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காக தான் எனது மகன் பணியாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். 

click me!