உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல்… இன்றே கடைசி… இறுதிக்கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

By manimegalai aFirst Published Sep 22, 2021, 8:26 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.

தமிழகத்தில் புதிய அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி ஆரம்பானது. இன்றே அதற்கான கடைசி நாள் ஆகும்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவு பெறுகிறது. ஆகையால் அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 25ம் தேதி கடைசி நாளாகும்.கிராம ஊராட்சிகளில் போட்டியிடுபவர்கள் 200 ரூபாயும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 600 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 1000 மற்றும் பட்டியலின மக்கள் 50 சதவீதம் தொகை செலுத்த வேண்டும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

click me!